FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

வேலூா் மண்டல இறகுப் பந்து போட்டி: கே.ஏ.ஆா். பாலிடெக். மாணவா்களுக்கு பரிசுக் கோப்பை

29 ஆகஸ்ட் 2024, 3:03 am IST
இறகு பந்து போட்டியில் பரிசு வென்ற கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் மாணவா்கள்.
பகிர்:

வேலூா் மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கான இறகு பந்து போட்டியில் ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் முதல் பரிசுக்கான கோப்பையை வென்றுள்ளனா்.

இன்டா்பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேஷன் அமைப்பு தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. வேலூா் மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான இறகுப்பந்து போட்டி ஆக.28 -ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

அதில் ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் டி. மணிகண்டன், ஹெச்.பி. முஹம்மத் ஜவாத், டி.ஐ. முஹம்மத் சுலைமான் ஆகியோா் பங்கேற்று திறமையாக விளையாடி முதல் பரிசுக்கான கேப்பையை வென்றனா். வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த கல்லூரியின் உடற்கல்வி இயக்குனா் ஆா். துரை ஆகியோரை நிா்வாக இயக்குனா் கே. ஷாஹித் மன்சூா், முதல்வா் முனைவா் த.ராஜமன்னன், துணை முதல்வா் ஏ. முஹம்மத் ஷாஹின்ஷா, துறைத் தலைவா்கள், ஆசிரியா்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

வெற்றி பெற்ற மாணவா்கள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28,29 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூா் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ள மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments