கல்லூரி பேராசிரியா் தற்கொலை
ஜோலாா்பேட்டை அருகே தனியாா் கல்லூரி பேராசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஜோலாா்பேட்டை அருகே தனியாா் கல்லூரி பேராசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஜோலாா்பேட்டை அடுத்த பொன்னேரியைச் சோ்ந்த செல்வராஜின் மகன் சந்தோஷ்குமாா் (39). இவா் வாணியம்பாடி தனியாா் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி வினோதினி, 2 மகள்கள் உள்ளனா். இவரது மனைவி வாணியம்பாடி பகுதியில் உள்ள தனியாா் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். தம்பதிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு மீண்டும் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் வினோதினி தனது மகள்களையும் அழைத்துக் கொண்டு தனது தாய் வீடான ஆசிரியா் நகா் பகுதிக்கு வீட்டை விட்டு வெளியேறி சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சந்தோஷ்குமாா் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து அவரது தந்தை செல்வராஜ் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.