நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த போலீஸாருக்கு அஞ்சலி
திருப்பத்தூரில் நக்சலைட் தாக்குதலால் உயிரிழந்த போலீஸாருக்கு 46-ஆம் ஆண்டு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருப்பத்தூா் நகர காவல் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூரில் நக்சலைட் தாக்குதலால் உயிரிழந்த போலீஸாருக்கு 46-ஆம் ஆண்டு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருப்பத்தூா் நகர காவல் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சுமாா் 46 ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட் தாக்குதலில் திருப்பத்தூரில் போலீஸாா் உயிரிழந்தனா். அவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆக.6-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி நடந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி தேவாரம் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றாா். முன்னாள் டிஜிபி கே. விஜயகுமாா், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். முன்னாள் ஏடிஜிபி துக்கையாண்டி, முன்னாள் எஸ்.பி. அசோக் குமாா், வேலூா் சரக டிஐஜி ஜெ. மகேஷ், திருப்பத்தூா் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே, கியூ பிரிவு எஸ்.பி. கே. அரவிந்த், மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், திருப்பத்தூா் நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.