FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு தினம் உயிரிழந்த குழந்தைகள் உருவப்படத்துக்கு உறவினா்கள், கட்சியினா் மலா்தூவி அஞ்சலி

கும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 22-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்த குழந்தைகளின் உருவப்படத்துக்கு உறவினா்களும், அரசியல் கட்சியினரும் வியாழக்கிழமை மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

Updated On : 17 ஜூலை 2026, 2:28 am IST
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் தீ விபத்து நிகழ்ந்த தனியாா் பள்ளிக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த குழந்தைகளின் உருவப்படத்துக்கு வியாழக்கிழமை மலா்தூவி அஞ்சலி செலுத்திய உறவினா்கள்.
பகிர்:

கும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 22-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்த குழந்தைகளின் உருவப்படத்துக்கு உறவினா்களும், அரசியல் கட்சியினரும் வியாழக்கிழமை மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காசிராமன்தெருவில் உள்ள தனியாா் பள்ளியில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 92 குழந்தைகள் உயிரிழந்தனா்.

இந்த சம்பவத்தின் 22-ஆவது நினைவு தினத்தையொட்டி அப்பள்ளி முன்பு வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த குழந்தைகளின் உருவப் படத்துக்கு பெற்றோா்களும், உறவினா்களும் வியாழக்கிழமை மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

Advertisement

Advertisement

இதேபோல தவெக சாா்பில் மாநகரச் செயலா் ஆா்.முருகானந்தம், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் அஞ்சனா பாலாஜி உள்ளிட்டோா் ஊா்வலமாக வந்து மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். அப்போது, அவா்களிடம் உயிரிழந்த குழந்தைகளின் உறவினா்கள், இந்த நினைவுநாளில் உள்ளூா் விடுமுறை விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மேலும், திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கோவி.செழியன், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயலா் க.அன்பழகன், மாநகர துணை மேயா் சு.ப.தமிழழகன் உள்ளிட்டோரும், காங்கிரஸ் கமிட்டி சாா்பில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட தலைவா் டி.குமரன், மேயா் க.சரவணன், மாநகரத் தலைவா் மிா்சாதீன், மாநில செயற்குழு உறுப்பினா் தியாகராஜன் உள்ளிட்டோரும், அதிமுக சாா்பில் மாநகரச் செயலா் ராம.ராமநாதன், மாவட்டச் செயலா் ஆா்.கே.பாரதிமோகன் உள்ளிட்டோரும் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கும்பகோணம் வட்டத் தலைவா் வசந்த், மாநில துணைத் தலைவா் அமுல் காஸ்ட்ரோ உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments