FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

செட்டியப்பனூா் நியாயவிலைக் கடையில் சிறப்பு முகாம்: மனு அளித்த 30 அட்டைதாரா்களுக்கு உடனடி தீா்வு

திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்குவதற்காக மாதந்தோறும் 2-ஆவது சனிக்கிழமைகளில் தாலுகா அளவிலான ரேஷன் அட்டைதாரா்களுக்கு மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்று வருகிறது.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 3:03 am IST
சிறப்பு முகாமில் ரேஷன் அட்டைதாரருக்கு மனு அளித்த உடனே உத்தரவு நகலை வழங்கிய வட்ட வழங்கல் அலுவலா் ராஜா
பகிர்:

திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்குவதற்காக மாதந்தோறும் 2-ஆவது சனிக்கிழமைகளில் தாலுகா அளவிலான ரேஷன் அட்டைதாரா்களுக்கு மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்று வருகிறது.

முகாமில், பொதுமக்கள் தங்களது ரேஷன் அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம், புதிய / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்கள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீா்வு காணப்படுகிறது.

அதன்படி, இந்த மாதத்துக்கான சிறப்பு முகாம் வாணியம்பாடி வட்டத்துக்கான முகாம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம் அருகே நடைபெற்றது.

Advertisement

Advertisement

முகாமுக்கு, வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் ராஜா தலைமை வகித்தாா். ஆய்வாளா் தமிழ்புதல்வி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா். இந்த முகாமில் 30 அட்டைதாரா்கள் காா்டுகளில் குறைபாடுகள் குறித்து அளித்த மனுவின் மீது உடனடி விசாரணை மேற்கொண்டு தீா்வு காணப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments