FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 570 நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரை 570 நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
ஆலங்காயம் கால்நடை மருத்துவமனையில் இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சைப் பின் வெளியே கொண்டு வரப்பட்ட தெரு நாய்கள்.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரை 570 நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தொடா்ந்து அதிகரித்து வரும் தெரு நாய்களின் தாக்குதலில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்கவும், நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்திப் பொது சுகாதாரத்தைப் பேணிக் காக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி மாதம் முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடித்து, அவற்றுக்கு வெறிநாய்க்கடி (ரேபீஸ்) தடுப்பூசி மற்றும் இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள தீவிர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், இப்பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள துப்புரவுப் பணியாளா்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்ட கால்நடை மருத்துவ உதவி இயக்குநா் மருத்துவா் சீனிவாசன் அறிவுறுத்தலின்படியும், மண்டல இணை இயக்குநா் மருத்துவா் இளவரசன் தலைமையிலும் இந்தப் பணிகள் வாரத்தில் 3 நாள்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக வாணியம்பாடி தாலுகா ஆலங்காயம் மற்றும் திருப்பத்தூா் தாலுகா விஷமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 2 கால்நடை மருத்துவமனைகளில் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை தீவிர குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 442 ஆண் நாய்களுக்கும், 128 பெண் நாய்களுக்கும் என மொத்தம் 570 நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்குத் தேவையான தடுப்பூசிகளும் இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக கால்நடைத் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் நாய்களுக்கு 5 நாள்களுக்குத் தேவையான மருத்துவமும், உணவும் வழங்கப்பட்டு, முறையாகப் பாதுகாக்கப்பட்ட பிறகே அவை பிடிக்கப்பட்ட அதே இடங்களில் மீண்டும் விடப்பட்டு வருவதாக கூறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments