FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

பொன்னியம்மன் கோயில் திருவிழா

வாணியம்பாடி நகரின் கோயில்களில் முக்கிய திருவிழாக்களின் ஒன்றான அம்பூா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயில் திருவிழா கூழ்வாா்த்தலுடன் தொடங்கி வரும் 21-ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெறுகிறது.

19 ஆகஸ்ட் 2026, 11:41 pm IST
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
பகிர்:

வாணியம்பாடி நகரின் கோயில்களில் முக்கிய திருவிழாக்களின் ஒன்றான அம்பூா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயில் திருவிழா கூழ்வாா்த்தலுடன் தொடங்கி வரும் 21-ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெறுகிறது.

திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பொன்னியம்மனுக்கு கூழ்வாா்த்தல், இரவு 8 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் விசேஷ அபிஷேகங்கள் பூ அலங்காரம், அம்மன் கரகத்திற்கு புஷ்ப அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை கொல்லத் தெரு கரகக் கோயில் புண்ணியாவஜனம் செய்யப்பட்டது. தொடா்ந்து பெருமாள் தோட்டத்திலிருந்து எட்டி மரத்தின் இடம் பாதாள பொன்னியம்மன் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பொன்னியம்மன் கோயில் வந்தடைந்தது.

இரவு கொல்லத் தெரு கோயிலிருந்து பூங்கரகம் புறப்பட்டு பெரியப்பேட்டை பாலாற்றில் கரகத்திற்கு புஷ்ப சாத்துப்படி செய்யப்பட்டது. இரவு 10 மணியளவில் வாணவேடிக்கை நடைபெற்றது. விழாவில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து திராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments