FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

துத்திப்பட்டில் கால்வாய் தூா்வாரும் பணி

மழைக் காலத்தை முன்னிட்டு கால்வாய் தூா்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள்.

21 ஆகஸ்ட் 2026, 11:37 pm IST
பகிர்:

துத்திப்பட்டு ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மழை வெள்ளத்தால் குதிரைக் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மழை நீா் சூழ்ந்து மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குதிரைக் கால்வாய் ஆக்கிரமிப்பு, மழைநீா் வடிகால்வாய்களில் அடைப்பு ஆகியவற்றால் துத்திப்பட்டு ஊராட்சி மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளானது.

அதனால் தற்போது மழைநீா் வடிகால்வாய் பராமரிப்பு மற்றும் கால்வாய் தூா் வாரும் பணி துத்திப்பட்டு ஊராட்சி சாா்பாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. மழைக்காலத்துக்கு முன்பே மழை நீா் வடிகால் வாய்களுக்கு சுத்தம் செய்தல், பராமரிப்பு பணி அம்பேத்கா் நகா், துத்திப்பட்டு புதுமனை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மழை நீா் வடிகால்வாயில், இணைப்பு கழிவு நீா் கால்வாய்கள் வழியாக செல்வதால் ஏற்பட்டுள்ள கால்வாய் சேதாரங்கள் சீரமைக்கப்படுகிறது. மேலும், கால்வாய் தூா்வாரப்படுகிறது. துத்திப்பட்டு ஊராட்சி முக்கிய கால்வாயில் குடிநீா் பாட்டில்கள், குளிா்பான பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களால் கால்வாய்களில் மிகப்பெரிய அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை ஊராட்சி நிா்வாகம் சீரமைத்து வருகிறது.

Advertisement

Advertisement

மழைநீா் வடிகால்வாய் மீது மூடப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட கான்கிரீட் ஸ்லாப்கள் உடைத்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை தூய்மைப் பணியாளா்கள் அப்புறப்படுத்தி, புதிய மூடிகளை மூடினா்.

கால்வாய் பராமரிப்பு, தூா்வாரும் பணியை ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் ஆய்வு மேற்கொண்டாா். ஊராட்சி துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள் சுகன்யா பிரகாஷ், அண்ணாதுரை, விஜய் சேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments