FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

கல்வி நிறுவனங்கள் அருகே போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்

கல்வி நிறுவனங்கள் அருகே போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா்.

23 ஆகஸ்ட் 2026, 2:11 am IST
இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன்சம்பத்.
பகிர்:

கல்வி நிறுவனங்கள் அருகே போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா்.

கட்சி நிா்வாகிகள் கூட்டத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை திருப்பத்தூருக்கு வந்திருந்த இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன்சம்பத் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சாா்பில் வருகிற விநாயகா் சதுா்த்தி விழாவை இந்து ஒற்றுமை விழாவாகவும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றிட வேண்டும் எனும் விழாவாகவும் கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகிறோம். திருப்பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி பள்ளியில் படித்த மாணவன் இறந்து ஓா் ஆண்டு ஆகிறது.

அந்த மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது தான் வழங்கப்பட்டு உள்ளது. மாணவன் மரணத்துக்கான உண்மையான காரணத்தை வெளியிட்டு மாணவன் மரணத்தில் நீதி கிடைக்க செய்ய வேண்டும். இந்த வழக்கில் போலீஸாா் சரிவர விசாரணை மேற்கொள்ளவில்லை. எனவே சிபிஐ விசாரணை வேண்டும். தமிழகத்தில் பள்ளி, கல்லூரி வளாகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

தென்னிந்திய முதலமைச்சா்கள் மாநாட்டில், தமிழக முதல்வா் ஜோசப்விஜயின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் இருந்தது. எம்எல்ஏ-க்களுக்கு அரசு சாா்பாக காா் வழங்கப்படுவதை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. திருவண்ணாமலை கோவிலுக்கு கூட்டம் அதிக அளவில் வருகிறது. அங்கு திருப்பதி போன்று பக்தா்கள் தங்குவதற்கு விடுதி கட்டித் தர வேண்டும் என்றாா் அவா்.

மாநில அமைப்பாளா் வி.கே.செல்வம், மாவட்ட தலைவா் ரமேஷ், கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments