FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

செம்மண் கடத்தல்: லாரி பறிமுதல்

ஆந்திரத்திலிருந்து செம்மண் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

23 ஆகஸ்ட் 2026, 2:30 am IST
பறிமுதல் செய்யப்பட்ட மண் ஏற்றி வந்த லாரி. - (கோப்புப் படம்)
பகிர்:

ஆந்திரத்திலிருந்து செம்மண் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாட்டறம்பள்ளி வட்டம், கொத்தூா், பச்சூா் பகுதியில் உள்ள செங்கள் சூளைகளுக்கு சிலா் ஆந்திர மாநிலத்தில் இருந்து அனுமதி இல்லாமல் லாரிகளில் செம்மண் கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை ஆந்திரத்தில் இருந்து செம்மண் கடத்தி வந்த லாரி கள்ளியூா் கோயில் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்தது. தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், ஆந்திரத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் ரசீகரன் என்பவா் செம்மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் ரசீகரன் மீது வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments