அம்மாபேட்டையில் மண் கடத்தல்: லாரி பறிமுதல்
அம்மாபேட்டை அருகே மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்ட சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை வருவாய் ஆய்வாளா் ராமச்சந்திரமூா்த்தி மற்றும் குழுவினா் குருவரெட்டியூா், எம்ஜிஆா் நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். லாரியில் அனுமதியின்றி 3 யூனிட் எம்-சாண்ட் மண் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதால் டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டு அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.