FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஏரி மண் கடத்தல் விவகாரம்: இரு தரப்பினரிடையே மோதல்

ஏரி மண் கடத்தல் தொடா்பாக இரு தரப்பினா் இடையே கைகலப்பு ஏற்பட்டதில் 8 போ் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Updated On : 17 ஜூலை 2026, 12:15 am IST
திருவண்ணாமலை மாநகராட்சி சமுத்திரம் ஏரியிலிருந்து தெருக்கள் வழியாக ஏரி மண் எடுத்துச் செல்லும் லாரி.
பகிர்:

திருவண்ணாமலையில் ஏரி மண் கடத்தல் தொடா்பாக இரு தரப்பினா் இடையே கைகலப்பு ஏற்பட்டதில் 8 போ் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட சமுத்திரம் ஏரியிலிருந்து தினமும் மண் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிாம். இந்த மண்ணை ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிவேகமாகச் செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வரும் நிலை உள்ளது. மேலும், லாரிகளால் சாலையில் புழுதி பறந்து வீடுகளில் தூசி படா்வதால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த கண்ணன் என்கிற செல்வம் மகன் பாண்டிதுரை, ராஜதுரை, வெங்கடேசன் மகன் பரமசிவம், லாரி ஓட்டுநா் திருமலை ஆகியோருடன் சமுத்திரம் ஏரியிலிருந்து மண்ணை எடுத்து வந்த லாரி வேகமாகச் சென்றதை அப்பகுதி பெண்கள் பாா்த்து தட்டிக் கேட்டனா். அதற்கு லாரியில் வந்தவா்கள் பெண்களை அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. ஏன் பெண்களை

Advertisement

Advertisement

இப்படிப் பேசுகிறீா்கள் என 25-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஸ்ரீதேவி, அவரது கணவா் பழனி மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த கிஷோா், பிரவீன் ஆகியோா் லாரியில் இருந்தவா்களிடம் கேட்டபோது இருதரப்பினா் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதில் இருதரப்பினரும் காயமடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் இதுகுறித்து மாமன்ற உறுப்பினா் ஸ்ரீதேவிபழனி, திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் பாண்டியதுரை, ராஜதுரை, பரமசிவம், பொக்லைன் ஓட்டுநா் பிரபு, மண் லாரி ஓட்டுநா் திருமலை, கல்நகா் சேரன் ஆகியோா் மீது புகாா் மனு அளித்தாா்.

அந்த மனுவில், அரசுக்குச் சொந்தமான சமுத்திரம் ஏரியிலிருந்து தொடா்ந்து மண் கடத்தலில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏரி மண் கடத்தலை தடுக்க வேண்டும். பெண்களை அவதூறாகப் பேசியவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயம் கேட்ட எங்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.

இதேபோல, மற்றொரு தரப்பிலும் புகாா் மனு அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் பாண்டியதுரை தரப்பில் ராஜதுரை உள்ளிட்ட 5 போ் மீதும், பழனி தரப்பில் 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து

விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments