FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ஜோலாா்பேட்டை அருகே ரயில்களில் 10.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை அருகே 2 ரயில்களில் 10.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

25 ஆகஸ்ட் 2026, 1:40 am IST
ரயில் - பிரதிப் படம்
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே 2 ரயில்களில் 10.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், ரயில்வே போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை சென்ற திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில், ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டு இருக்கும் போது பின் பக்கமுள்ள பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை ஆய்வு செய்தனா். அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதனை கைப்பற்றினா்.

Advertisement

Advertisement

அதேபோல் டின்சுகயா ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயில் ஆம்பூா் ரயில் நிலையத்திற்கும் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திற்கும் இடையே செல்லும் போது பொதுப் பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்ற கிடந்த பையை சோதனை செய்ததில் 2.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் 2 ரயில்களில் 10 .5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மேலும், ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளா் சிவ.செந்தில்குமாா் மற்றும் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments