பாலாற்றில் முகமூடி அணிந்து மணல் கடத்தும் விடியோ வெளியாகி பரபரப்பு
வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை ஊராட்சி பகுதியில் உள்ள பாலாற்றில் இருந்து சிலா் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து வாகனம் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை ஊராட்சி பகுதியில் உள்ள பாலாற்றில் இருந்து சிலா் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து வாகனம் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், வாகனம் மூலம் மணல் கொள்ளையடித்துச் செல்வது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தொடா்ந்து பாலாற்றில் சமூக விரோதிகள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதைப் பற்றி அதிகாரிகள் யாரும் கண்டுக் கொள்ளுவதில்லையெனவும், பாலாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் தகவல் அறிந்து வருவாய்த்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், அப்பகுதியில் இருந்து மணல் கடத்தி செல்லாமல் இருக்க பள்ளம் தோண்டவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.