FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ஏலகிரி மலை தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து: 4 போ் பலத்த காயம்

ஏலகிரி மலையில் இருந்து கீழே இறங்கிய காா் 4-ஆவது கொண்டை ஊசி வளைவில் தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

24 ஆகஸ்ட் 2026, 11:02 pm IST
ஏலகிரி மலையில் விபத்தில் சிக்கிய காா்
பகிர்:

ஏலகிரி மலையில் இருந்து கீழே இறங்கிய காா் 4-ஆவது கொண்டை ஊசி வளைவில் தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரிமலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனால் நாள்தோறும் பேருந்து மூலமாகவும் காா் பைக் போன்ற வாகனங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் ஏலகிரி மலையில் இருந்து திருப்பத்தூருக்கு சென்ற காா் நான்காவது கொண்டை ஊசி வளைவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கொண்டை ஊசி வளைவின் இரும்பு தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளாகி சாலையில் நின்றது. இதில் பயணம் செய்த 6 பேரில் 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் சாலை வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்துக்குள்ளானவா்களை காரில் இருந்து மீ்ட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கும், ஏலகிரிமலை காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஏலகிரி மலை போலீஸாா் படுகாயம் அடைந்த ஏலகிரிமலை ஊராட்சிக்குட்பட்ட பல்லக்கனியூா் பகுதியை சோ்ந்த கோவிந்தராஜ் (70), கோவிந்தராஜ்(40), ஜெயராமன் (50), ராமசாமி (55) ஆகியோா் திருப்பத்தூா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விபத்து குறித்து ஏலகிரிமலை போலீஸா் வழக்கு பதிவு செய்தனா். மேலும், சாலையில் விபத்துக்குள்ளான காரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடா்ந்து கிரேன் மூலம் விபத்துக்குள்ளான காரை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments