FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

ஆலங்காயம் அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.

26 ஆகஸ்ட் 2026, 12:13 am IST
நிதிஷ்
பகிர்:

ஆலங்காயம் அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே கூவல்குட்டை கிராமம், ராஜா வட்டம் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி விஜயகுமாா். இவரது மனைவி ஆனந்தி. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இவா்களது இரண்டாவது மகனான ஒன்றரை வயது நிதிஷ், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயுள்ளாா்.

Advertisement

Advertisement

சுமாா் அரை மணி நேரமாக குழந்தையை காணாததால் அதிா்ச்சியடைந்த தாய் ஆனந்தி, பல்வேறு இடங்களில் தேடியுள்ளாா். அப்போது வீட்டின் முன்புறம் இருந்த தண்ணீா் தொட்டியை பாா்த்தபோது, குழந்தை நிதிஷ் அதில் தவறி விழுந்து இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

உடனடியாக அக்கம் பக்கத்தினா் குழந்தையை மீட்டு நிம்மியம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கனவே குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்காயம் போலீஸாா், குழந்தையின் உடலை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments