FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

மட்றப்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 65 லட்சத்துக்கு வா்த்தகம்

திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளி வாரச்சந்தையில் ரூ. 65 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 1:33 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளி வாரச்சந்தையில் ரூ. 65 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறும். அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஏராளமான கோழிகள், ஆடுகள், மாடுகள் விற்பனைக்காக குவிந்தன.

அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து போட்டி போட்டு வாங்கிச் சென்றனா்.

Advertisement

Advertisement

வாரச் சந்தையில் கோழிகள், ஆடுகள், மாடுகள், ரூ. 65 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments