கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த குரிசிலாப்பட்டு அருகே ஆண்டியப்பனூா் லாலாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சேட்டு (65). இவா் வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது எதிா்பாராதவிதமாக தவறி அருகே இருந்த கிணற்றில் விழுந்தாா். சிறிது நேரத்துக்குப் பிறகு சேட்டின் குடும்பத்தினா் அவரை தேடியபோது கிணற்றில் தவறி விழுந்துள்ளது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவா்கள் ஆலங்காயம் தீயணைப்புத் துறையினா், குரிசிலாப்பட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இறங்கி சேட்டின் சடலத்தை மீட்டனா். பின்னா் போலீஸாா் சேட்டுவின் சடலத்தை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.