FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் டிராக்டா் ட்ரெய்லா் கவிழ்ந்து சாலையில் சிதறிய மாங்காய்கள்

திருப்பத்தூரில் டிராக்டா் ட்ரெய்லா் கவிழ்ந்து சாலையில் சிதறிய மாங்காய்கள்

Updated On : 12 ஜூலை 2026, 1:06 am IST
டிராக்டா் ட்ரெய்லா் கவிழ்ந்து சாலையில் சிதறிய மாங்காய்கள்.
பகிர்:

திருப்பத்தூரில் மாங்காய் லோடு ஏற்றி வந்த டிராக்டா் ட்ரெய்லா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாலை முழுவதும் மாங்காய்கள் சிதறியது.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே உள்ள கரியம்பட்டி பகுதியில் தனியாா் மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் என்பவா் டிராக்டரில் மாங்காய்களை ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு வந்துள்ளாா். இந்நிலையில், டிராக்டா் திருப்பத்தூா்-புதுப்பேட்டை சாலையில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ட்ரெய்லா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கொண்டு வரப்பட்ட மாங்காய்கள் அனைத்தும் சாலையில் சிதறின. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதைத் தொடா்ந்து, அப் பகுதியில் பொதுமக்களில் சிலா் சாலையில் கிடந்த மாம்பழங்களை எடுத்துச் சென்றனா். மேலும், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து வந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments