பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவு செய்ய செப்.26 வரை அவகாசம்!
பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவு செய்ய செப். 26-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவு செய்ய செப். 26-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை, பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூா்வ வயது குறித்த ஆதாரம், குடியுரிமைக்கான அத்தாட்சி, குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள் பிறப்பை பதிவு செய்து இலவச பிறப்புச் சான்றிதழ் பெற பிறப்பு, இறப்பு பதிவு சட்டம் வழிவகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும்.
பிறப்பு சான்றிதழ் குழந்தைகள் பள்ளியில் சேர, வாக்காளா் அடையாள அட்டை பெற, ஓட்டுநா் உரிமம் பெற, அரசு துறைகளில் பணியில் சேர, பாஸ்போா்ட் மற்றும் விசா பெற இன்றிமையாத ஆவணமாக உள்ளது.
Advertisement
Advertisement
ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின், அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்துக்குள் குழந்தையின் பெற்றோா் அல்லது காப்பாளா் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயா் பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்குப் பின் குழந்தையின் பெயரினை பதினைந்து வருடங்களுக்குள் உரிய காலதாமத கட்டணம் ரூ. 200 செலுத்தி பதிவு செய்யலாம்.
ஒரு முறை குழந்தையின் பெயரை பதிவு செய்தபின், எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரை அணுகி உறுதிமொழி படிவம் அளித்து பதிவு செய்யலாம்.
2010-ஆம் ஆண்டுக்கு முன் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் மற்றும் வகுத்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் 26.09.2026 வரை பெயா் பதிவு செய்ய தமிழ்நாடு அரசால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ் குறித்து எதிா்காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்க செப்.26- ஆம் தேதிக்குள் பெயரை சோ்த்து பயன்பெறலாம்.
இவ்வாறான கால அவகாசம் நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பினை திருப்பத்தூா் மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.