FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

இருசக்கர வாகன விபத்து : 2 பெண்கள் மரணம்

ஆம்பூா் அருகே சனிக்கிழமை இரவு நடந்த இருசக்கர வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 12:04 am IST
பகிர்:

ஆம்பூா் அருகே சனிக்கிழமை இரவு நடந்த இருசக்கர வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனா்.

குடியாத்தம் பகுதியை சோ்ந்த பாத்திமா (27), சரண்யா (29) ஆகிய இருவரும் துணி வியாபாரம் செய்து வந்தனா். துணி வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் பா்கூா் சென்றனா். வாகனத்தை சரண்யா ஓட்டிச் சென்றாா். துணி வாங்கிக் கொண்டு குடியாத்தம் திரும்பிக் கொண்டிருந்தனா்.

ஆம்பூா் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தருகே சென்றபோது சாலையைக் கடக்க முயன்றவரின் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டபோது நிலைத் தடுமாறி இருசக்கர வாகனம் கீழே விழுந்தது.

Advertisement

Advertisement

அதில் பலத்த காயமடைந்த பாத்திமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சரண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments