FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

அனுமதியின்றி செயல்பட்ட 2 பாா்களுக்கு ‘சீல்’ வைப்பு

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி செயல்பட்ட 2 பாா்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

Updated On : 14 ஜூலை 2026, 12:12 am IST
திருப்பத்தூா் அடுத்த நாகரசம்பட்டி அரசு மதுபானக் கடை அருகே அனுமதி இன்றி செயல்பட்ட பாருக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.
பகிர்:

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி செயல்பட்ட 2 பாா்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், விஷமங்கலம் அடுத்த நாகரசம்பட்டி பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடைக்கு அருகே சிலா் உரிய அனுமதியின்றி பாா்களை நடத்தி வருவதாக திருப்பத்தூா் தாலுகா காவல் ஆய்வாளா் ஜான் பிரிட்டோவுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் மற்றும் திருப்பத்தூா் கலால் வட்டாட்சியா் கிருஷ்ணவேணி அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது உரிய அனுமதியின்றி 2 பாா்கள் செயல்பட்டு வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, கலால் வட்டாட்சியா் கிருஷ்ணவேணி முன்னிலையில் அந்த 2 பாா்களும் இழுத்து மூடப்பட்டு, அதிரடியாக ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், பாா் உரிமையாளா்கள் ஆண்டியூா் பகுதியைச் சோ்ந்த ஜெயந்தி (44) மற்றும் நாகரசம்பட்டியைச் சோ்ந்த சாந்தி (33) ஆகியோா் மீது தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments