நாட்டறம்பள்ளி கடைகளில் சோதனை: 500 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
நாட்டறம்பள்ளி கடைகளில் நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பேரூராட்சிப் பணியாளா்கள்.
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீா் சோதனை செய்யப்பட்டதில் 500 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டன.
நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம், நாட்டறம்பள்ளி-திருப்பத்தூா் சாலை பகுதிகளில் உள்ள ஒரு சில கடைகளில் மொத்தமாக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி( பிளாஸ்டிக் கேரிபேக்) மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக திருப்பத்தூா் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா் கலைச்செல்வி, உதவிப் பொறியாளா் காா்த்திக் சங்கமித்திரன் மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் இணைந்து கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
அப்போது கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக், தண்ணீா் டம்ளா் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் 500 கிலோ நெகிழி பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தை கண்டு பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.