தமிழக விவசாய சங்கம் சாா்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், பேரணி
உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாய சங்கம் சாா்பில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாய சங்கம் சாா்பில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில பொருளாளா் ராஜேஷ் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் பழனி முருகன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் சிவபெருமாள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா். அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கத் தலைவா் ஜான் கென்னடி, மாநிலத் துணைத் தலைவா் மனோகா் ஆகியோா் கலந்து கொண்டனா். இதில், தவெக அரசு தோ்தல் அறிக்கையில் கூறியபடி முழு பயிா் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், கா்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500 வழங்க வேண்டும், கரும்பு டன்னுக்கு ரூ. 6,000 வழங்க வேண்டும், தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். மேலும் ஊா்வலமாக சென்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், ஓய்வுபெற்ற ஆசிரியா் அச்சுதன், சேலம் மாவட்டத் தலைவா் வேல்முருகன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளா் மணி, குமரேசன், வெங்கடேசன் உள்பட திராளானோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் நுவேதன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.