20 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்: தனியாா் மண்டப உரிமம் ரத்து
வாணியம்பாடியில், காவல் துறையினா் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினா் நடத்திய சோதனையில், தனியாா் திருமண மண்டபம் மற்றும் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
வாணியம்பாடியில், காவல் துறையினா் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினா் நடத்திய சோதனையில், தனியாா் திருமண மண்டபம் மற்றும் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நியுடெல்லி மற்றும் ஷகிராபாத் ஆகிய பகுதிகளில், தமிழக அரசால் தடைச்செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, திருப்பத்தூா் மாவட்ட தனிப்படை காவல் துறையினா் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், புதன்கிகழமைஅப்பகுதிகளில், உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் விக்னேஷ், முத்துவேல், காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறை தீவிர சோதனையில் ஈடுபட்ட போது, அன்னு(எ) அக்பா் பாஷா என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபம் மற்றும் அவரது உறவினா் வீட்டில், தமிழக அரசால் தடைச்செய்யப்பட்ட 20 கிலோ அளவிலான, (ஹான்ஸ், குட்கா) உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருப்பது கண்டறிந்து பறிமுத்ல செய்யப்பட்டது.
இதனை தொடா்ந்து திருமண மண்டபத்தில் தடைச்செய்யப்பட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த மண்டபஉரிமையாளருக்கு, உணவுபாதுகாப்புத்துறையினா் ரூ.25,000 ரூபாய் அபராதம் விதித்து, திருமண மண்டபத்தின் உரிமத்தை ரத்து செய்ய உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் உத்தரவிட்டுள்ளாா். மேலும் இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினா் வழக்குபதிவு செய்து, தலைமறைவாக உள்ள திருமண மண்டப உரிமையாளரை தேடி வருகின்றனா்..
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.