முகப்பு
திருப்பத்தூர்

வரதட்சிணை கேட்டு மருமகளை தற்கொலைக்கு தூண்டியதாக கணவா், மாமனாா், மாமியாா் கைது

Updated On : 4 ஜூன் 2026, 6:15 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே வரதட்சிணை கேட்டு மருமகளை தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் மாமனாா் மாமியாரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூா் பகுதியை சோ்ந்த விநாயகத்தின் மகன் வல்லரசுவுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த முருகனின் மகள் தீபிகா (23)என்பவருக்கும் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணமான ஒரு வாரத்தில் கணவன் வல்லரசு, மாமனாா் விநாயகம், மாமியாா் சித்ரா ஆகியோா் தீபிகாவிடம் வரதட்சணையாக பணம், நகை கேட்டு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால் தீபிகா கடந்த ஒரு மாதமாக அவரது தாய் வீட்டில் இருந்து வந்தாா். மேலு,ம் தீபிகாவின் பெற்றோா் நகை, பணம் கொடுக்க கால அவகாசம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவிரத்தி அடைந்த தீபிகா அவரது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

பின்னா் இதுகுறித்து முருகன் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து வல்லரசு,விநாயகம், சித்ரா ஆகிய மூன்று பேரை கைது செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெறுகிறது.