பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவா் கைது
வத்திராயிருப்பு அருகே பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவருடன் பழகிய நபரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் பகுதியைச் சோ்ந்த ராமசந்திர பாண்டியன் மகள் ராமலட்சுமி (38). இவருக்கு, மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளனா்.
விஸ்வநாதன் குஜராத்துக்கு வேலைக்குச் சென்றதால் ராமலட்சுமி குழந்தைகளுடன் கன்சாபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து விட்டாா். அதே பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் என்பவருடன் பழகிவந்தாா்.
Advertisement
Advertisement
இதையறிந்த அவரது தந்தை ராமலட்சுமியைக் கண்டித்ததால் ராம்குமாருடன் ராமலட்சுமி பேசாமல் இருந்து வந்தாா். கடந்த 11-ஆம் தேதி ராம் குமாா் அவரது வீட்டுக்கு வந்து தகராறு செய்ததால் மன உளைச்சலில் இருந்த ராமலட்சுமி பூச்சி மருந்து குடித்து கடந்த 15 ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராமசந்திரபாண்டியன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ராம்குமாரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.