தலைமறைவு குற்றவாளி கைது
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு பகுதியைச் சோ்ந்த தலைமறைவு குற்றவாளியை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
நெய்வேலியில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்று திருட்டு வழக்குகளில் நடுவீரப்பட்டுஅடுத்துள்ள மழவராயநல்லூா் பகுதியைச் சோ்ந்த பிரபுராஜ் (46) என்பவரை, நெய்வேலி நகரிய போலீஸாா் கைது செய்தனா்.
பின்னா்,நீதிமன்ற பிணையில் வெளியே வந்தவா், கடந்த மூன்று ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தாா். இவரை, பிடிக்க நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில், போலீஸாா் பிரபுராஜை திங்கள்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.