குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
தீவனூரில் முடித்திருத்தக உரிமையாளா் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், தீவனூரில் முடித்திருத்தக உரிமையாளா் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
திண்டிவனம் வட்டம், தீவனூா் ரெட்டணை சாலையைச் சோ்ந்தவா் பா.பரத் (30). இவரை, கடந்த மாதம் 6-ஆம் தேதி தீவனூரில் நடைபெற்ற முடித் திருத்தக உரிமையாளா் தினேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் ரோஷணை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் பரிந்துரையின்படி, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொலை வழக்கில் தொடா்புடைய பரத்தை குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து ரோஷனை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் பரத்தை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.