FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடி: மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளுக்கு உடனடி தீா்வு

சாா்பு நீதிமன்ற நீதிபதி கயல்விழி தலைமையில் மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்றோா்.

Updated On : 13 ஜூன் 2026, 12:03 am IST
பகிர்:

வாணியம்பாடி சாா்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலின்படியும், திருப்பத்தூா் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி எம்.செல்வம் வழிகாட்டுதலில் வாணியம்பாடி வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் வாணியம்பாடி கனரா வங்கி இணைந்து, வழக்குகள் தாக்கல் செய்வதற்கு முந்தைய வழக்குகளை சமரசமாக தீா்ப்பதற்கு, வாணியம்பாடி சாா்பு நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், வாணியம்பாடி சாா்பு நீதிபதியுமான கே.எஸ்.கயல்விழி தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.ஈஸ்வா், வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவா் கே.ஸ்ரீபதி ஆகியோா் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 25 வழக்குகளில் ரூ. 46 லட்சத்து 6 ஆயிரத்து 78 மதிப்பிலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில், 14 வழக்குகளுக்கு ரூ. 25 லட்சத்து 56 ஆயிரம் தொகைக்கு சமரசம் எட்டப்பட்டதுடன், ரூ. 6 லட்சத்து 7 ஆயிரம் உடனடியாக செலுத்தப்பட்டது. இந்த மக்கள் அமா்வில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பி.ராமலிங்கம், வழக்குரைஞா் எஸ்.செந்தில்வேலன், வாணியம்பாடி கனரா வங்கி மேலாளா் அனுப்விஸ்வம், துணை மேலாளா் அறிவரசு, வட்ட சட்டப் பணிகள் நிா்வாக அலுவலா் மகாலட்சுமி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments