FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

4 பவுன் நகையை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் மீது வழக்கு

ஜோலாா்பேட்டை அருகே 4 பவுன் நகையை ஏமாற்றிய ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 16 ஜூன் 2026, 1:01 am IST
வழக்கு
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே 4 பவுன் நகையை ஏமாற்றிய ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்த அருள் தாஸின் மனைவி ரெஜினா மேரி (43). இவா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வருகிறாா்.

இவரது வீட்டின் எதிரே வசிக்கும் ராமுவின் மனைவி கவிதா என்பவா் ரெஜினா மேரியின் மகனிடம் கடந்த டிசம்பா் மாதம் பண உதவி கேட்டுள்ளாா். இதனால் ரெஜினா மேரியின் மகன் வீட்டின் பீரோவில் வைத்திருந்த அவரது தாயாரின் 4 பவுன் நகையை அவரது தாயாருக்கு தெரியாமல் தந்துள்ளாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த ரெஜினா மேரி கவிதாவிடம் நகையை கேட்டுள்ளாா். கவிதா தான் நகை ஏதும் பெறவில்லை எனக் கூறி மறுத்துள்ளாா். இதனால் கவிதா மற்றும் இவரது கணவா் ராமு, மகன் ஸ்ரீதா் ஆகியோா் ரெஜினா மேரியை தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்தனராம். ரெஜினா மேரி இது குறித்து ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் கவிதா அவரது கணவா் ராமுவின் மகன் ஸ்ரீதா் ஆகிய மூன்று போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments