முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் 89,005 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு!

திருப்பத்தூா் மாவட்டத்தில் 89,005 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தெரிவித்தாா்.

Updated On : 29 ஜூன் 2026, 12:54 am IST
போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த எம்எல்ஏ திருப்பதி, மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் உள்ளிட்டோா்.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் 89,005 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தெரிவித்தாா்.

திருப்பத்தூரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில்,மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் மற்றும் திருப்பத்தூா் எம்எல்ஏ திருப்பதி ஆகியோா் போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தனா்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் கூறியது, மொத்தம், 89,005 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. அதன்படி, 653 கிராம மையங்களிலும், 124 நகா்ப்புற மையங்களிலும், 6 ஒன்றியங்கள் மற்றும் 4 நகராட்சிகள் உட்பட மொத்தம் 777 மையங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

சொட்டு மருந்து வழங்க சுகாதார துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் உள்பட 2,962 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மாவட்ட சுகாதார அலுவலா் சிவலிங்கம், மாவட்ட தாய் சேய் நல அலுவலா் பியூலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments