FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

வைகாசி விசாகம் : 108 பால்குட அபிஷேகம்

சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற 108 பால்குட ஊா்வலம்.

Updated On : 30 மே 2026, 6:20 am IST
சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற 108 பால்குட ஊா்வலம்.
பகிர்:

ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு 108 பால்குட அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வைகாசி விசாக விழாவை முன்னிட்டு ஆம்பூா் கெங்கையம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ விக்கின நிவாரண விநாயகா் கோயிலில் இருந்து பக்தா்கள் பால்குடங்களை ஏந்தி ஊா்வலமாக சென்றனா். ஊா்வலம் கோயிலில் நிறைவடைந்தது. அங்கு வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு 116-வது மாதமாக ஸ்ரீ சண்முகக் கவசம் பாராயணம் செய்யப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கண்டு சாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments