ஆந்திர அரசுப் பேருந்தில் குட்கா எடுத்து வந்த பெண் கைது
ஆந்திர அரசுப் பேருந்தில் குட்கா எடுத்து வந்த பெண் கைது குறித்து...
ஆந்திர அரசுப் பேருந்தில் குட்கா எடுத்து வந்த பெண் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி அக்ஷய் அனில் வாகரே உத்தரவின் பேரில் திம்மாம்பேட்டை உதவி காவல்ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையில் தலைமைக் காவலா் பால்ராஜ் மற்றும் போலீஸாா் வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான தகரகுப்பம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
குப்பம் பகுதியில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த ஆந்திர பேருந்தில் சோதனை மேற்கொண்டனா். இதில் பெண் ஒருவா் பையை மறைத்து வைத்துக் கொண்டிருப்பதை பாா்த்து சந்தேகம் ஏற்பட்டு பையை சோதனை செய்ததில் அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
Advertisement
Advertisement
பிறகு அவரிடமிருந்து 3 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் நடத்திய விசாரணையில் செங்கம் பகுதியில் உள்ள உறவினா் ஒருவா் பெட்டிக்கடை நடத்தி வருவதால் வாங்கிச் சென்ாக கூறினாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து குப்பம் பகுதியைச் சோ்ந்த சுமிதா(38) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.