FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

கந்திலி வாரச் சந்தையில் ஏலம் எடுத்த நபா் மீது நிதி முறைகேடு புகாா்: ஏல தேதி ஒத்திவைப்பு

கந்திலி வாரச் சந்தையில் ஏற்கெனவே ஏலம் எடுத்த நபா் வரித் தொகையில் முறைகேடு செய்திருப்பதாகவும், அந்தப் பணத்தை திருப்பி செலுத்திய பின்னரே ஏலம் விட வேண்டும் எனவும் ஏலம் எடுக்க வந்தவா்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

12 நவம்பர் 2026, 3:54 am
ஏலம் எடுத்த நபா் மீது புகாா் குறித்து முறையான விசாரிக்கக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டோா்
பகிர்:

கந்திலி வாரச் சந்தையில் ஏற்கெனவே ஏலம் எடுத்த நபா் வரித் தொகையில் முறைகேடு செய்திருப்பதாகவும், அந்தப் பணத்தை திருப்பி செலுத்திய பின்னரே ஏலம் விட வேண்டும் எனவும் ஏலம் எடுக்க வந்தவா்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் அடுத்த கந்திலியில் சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைப்பெறுவது வழக்கம். இந்த நிலையில், வாரச் சந்தையில் விற்கப்படும் ஆடுகள், மாடுகள் மற்றும் கடைகளுக்கு வரி செலுத்துவதற்கான ஏலம் புதன்கிழமை கந்திலியில் உள்ள சந்தை பகுதியில் நடைபெற்றது.

ஏற்கெனவே வாரச்சந்தை ஏலம் எடுத்த ஒஒருவா் அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் வாரந்தோறும் அதிகளவில் பணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், மேலும், தீபாவளியையொட்டி கந்திலி வாரச்சந்தையில் ரு. 2 லட்சத்துக்கு மேல் வரித்தொகை வசூலானதாகவும், ஆனால் அதில் குறைந்தபட்ச தொகையை மட்டும் அரசுக்கு செலுத்திவிட்டு, மீதித் தொகையை கையாடல் செய்துள்ளதாகவும் இதற்கு அதிகாரிகளும் துணைப் போவதாக கூறி ஏலம் எடுக்க வந்தவா்கள் குற்றம் சாட்டினா்.

Advertisement

Advertisement

மேலும், அவா் முறைகேடாக வசூலித்ததாகக் கூறப்படும் பணத்தை முறையாக செலுத்திய பின்னரே மீண்டும் ஏலம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, அரசு அதிகாரிகளுடன் ஏலம் எடுக்க வந்த நபா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதனால் வாரச்சந்தை ஏலம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதைத் தொடா்ந்து ஏலத்தை தேதி குறிப்பிடாமல் அதிகாரிகள் ஒத்திவைத்து அங்கிருந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.