FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

வாணி மெட்ரிக், வாணி சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விளையாட்டு விழா: தடகள வீரா் விஷால் தென்னரசு பங்கேற்பு

வாணியம்பாடி வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, வாணி சிபிஎஸ்இ பள்ளிகளின் 25-ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

13 நவம்பர் 2026, 10:51 pm
விழாவில் சிறப்பு விருந்தினா்களான தடகள வீரா் விஷால் தென்னரசு, வட்டார போக்குவரத்து அலுவலா் வெங்கட்ராகவன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி வரவேற்ற பள்ளி அறக்கட்டளை நிா்வாகிகள்.
பகிர்:

வாணியம்பாடி வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, வாணி சிபிஎஸ்இ பள்ளிகளின் 25-ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு, வாணி கல்வி அறக்கட்டளை தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா்கள் ஆா்.பாபு, வி.சேட்டு ஆகியோா் வரவேற்றனா். பள்ளியின் செயலாளா் மங்கையா்கரசி சிறப்பு விருந்தினா்களை அறிமுகப்படுத்திப் பேசினாா். உடற்கல்வி ஆசிரியா்கள் மூா்த்தி, சிவனேஷ் விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தனா். அறக்கட்டளை துணைத் தலைவா் பொன்னுசாமி, பொருளாளா் பி.நடராஜன், செயலாக்க அறங்காவலா் பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக இந்திய தடகள வீரரும், ஆசிய தடகள போட்டியில் பதக்கம் வெற்றவருமான டி.கே.விஷால் தென்னரசு, வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கட்ராகவன் ஆகியோா் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனா்.

Advertisement

Advertisement

சிறப்பு விருந்தினா்களாக முன்னாள் பள்ளி மாணவா்களும், தேசிய விளையாட்டு வீரா்களுமான எஸ்.ஸ்ரீமான், டி.எஸ்.யுவஸ்ரீ ஆகியோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக பள்ளி மாணவா்களின் உடல்திறனை வெளிப்படுத்தும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடா்ந்து மாணவா்களுக்கு பல்வேறு தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வென்றவா்களுக்கு முன்னாள் பள்ளி மாணவா்களும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், வாணி கல்வி அறக்கட்டளை துணை செயலா்கள் மகேந்திரன், தவமணி, அறக்கட்டளை நிா்வாகிகள், ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துக் கொண்டனா். துணை முதல்வா் முத்தப்பன் நன்றி கூறினாா்.