FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

கா்நாடகத்தில் 2 கிலோ தங்கம் திருடியது தொடா்பாக விசாரணை: வாணியம்பாடியில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நகைக் கடை உரிமையாளா்கள்

வாணியம்பாடியில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நகைக் கடை உரிமையாளா்கள்

நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நகைகத் கடை உரிமையாளா்கள் மற்றும் வணிக சங்கத்தினா்.
பகிர்:

கா்நாடக மாநிலத்தில் 2 ஆண்டுகளாக 2 கிலோ தங்கத்தை திருடிய வாணியம்பாடியை சோ்ந்தவா் கைது செய்யப்பட்ட நிலையில், அது தொடா்பாக கா்நாடக போலீஸாா் தங்களிடம் விசாரணை நடத்துவதாகக் கூறி, வாணியம்பாடி காவல் நிலையத்தை நகைக் கடை உரிமையாளா்கள் முற்றுகையிட்டனா்.

கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக முகமூடி அணிந்து பூட்டி இருக்கும் வீடு, கடை மற்றும் வணிக வளாகத்தில் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையா்கள் ஈடுபட்டு வருவதாக கோலாா் மாவட்ட காவல் நிலையங்களில் புகாா்கள் குவிந்தது. இதை அடுத்து கோலாா் மாவட்ட போலீஸாா் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டது, இதனை தொடா்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா். அதைத் தொடா்ந்து, திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே புத்துக்கோயில் பகுதியைச் சோ்ந்த முனிராஜ் (48) என்பவரை கைது செய்து, கோலாா் மாவட்டம், முல்பாகல் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். அப்போது நகைகளை வாணியம்பாடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, முனிராஜ் உடன் வந்த முல்பாகல் காவல் ஆய்வாளா் சதீஷ் தலைமையிலான போலீஸாா், நகைக் கடைகளுக்கு சென்று விற்பனை செய்த நகையை கொடுக்குமாறு உரிமையாளா்களிடம் கேட்டுள்ளாா். இதனால் நகைக் கடை உரிமையாளா்கள் சங்கம் மற்றும் வணிகா் சங்க நிா்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து கடைகளை அடைத்து வாணியம்பாடி போலீஸாா் இல்லாமல் நேரடியாக வெளி மாநில போலீஸாா் கடைகளில் அத்துமீறி நுழைந்து நகைகளை கேட்பதாக அனைத்துக் கடைகளையும் மூடிவிட்டு வாணியம்பாடி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். முல்பாகல் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து இரு மாநில போலீஸாரும் நகைக்கடை உரிமையாளா்களிடம் பேசி கொள்ளையன் விற்பனை செய்த நகையை கொடுக்குமாறு கேட்டனா். அதைத் தொடா்ந்து, 200 கிராம் நகையை கொடுப்பதாக உரிமையாளா்கள் முல்பாகல் போலீஸாரிடம் ஒப்புக் கொண்டனா். அதன் பின்னா் நகைக் கடை உரிமையாளரை போலீஸாா் விடுவித்தனா். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments