FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதுரை நகைக் கடை கொள்ளை: நிஷாந்துக்கு டிச. 1 வரை நீதிமன்றக் காவல்!

நிஷாந்தை டிச. 1 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு.

34 வினாடிகள் முன்பு
நிஷாந்த் - கோப்புப்படம்
பகிர்:

மதுரை நகைக் கடை கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிஷாந்தை டிச. 1 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை தல்லாக்குளம் வைகை சாலையில் உள்ள தனியார் நகைக் கடையில் கடந்த நவ. 12-ஆம் தேதி 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து, மதுரை எஸ்எஸ் காலனி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து தனிப்படைகள் அமைத்து, நகை கொள்ளையில் ஈடுபட்டவரை தேடிவந்தனர்.

Advertisement

Advertisement

போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் நிஷாந்த் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் தொடர்புடையதாக இருவரை கைதுசெய்த தனிப்படை போலீஸார், முக்கிய நபரான நிஷாந்த்தை தீவிரமாக தேடிவந்தனர்.

இதனிடையே, தேடப்பட்டுவந்த நிஷாந்த், ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து சேலம் சென்ற தனியார் பேருந்தில் பயணித்த நிலையில் அவரைக் கைது செய்தனர்.

அவரிடம் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், மதுரை விளாச்சேரி கோபாலிபுரம் மலை அடிவாரம் பகுதியில் நகைகளைப் பதுக்கி வைத்திருப்பதாக நிஷாந்த் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை போலீஸாா் மீட்டனர்.

மொத்தம் 11.7 கிலோ நகைகள் இதுவரை மீட்கப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், மதுரை நகைக் கடை கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிஷாந்த், மதுரை மாவட்ட 5வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி, நிஷாந்தை டிச. 1 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

summary

Nishanth, who was arrested in connection with the jewelry store robbery in Madurai, has been ordered to be remanded in judicial custody until December 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.