FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதுரை நகைக் கடை கொள்ளை: மேலும் 6.2 கிலோ தங்கம் மீட்பு!

மதுரை நகைக் கடை கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து 6.2 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டது தொடர்பாக...

38 வினாடிகள் முன்பு
மதுரை நகைக் கடை திருட்டு சம்பவம் - படம்: டிஎன்எஸ்
பகிர்:

மதுரை நகைக் கடை கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து மேலும் 6.2 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.

ஏற்கெனவே, மீனாட்சி அடையாளம் காட்டியதன்பேரில் மாடக்குளம் பகுதியிலிருந்து 5.5 கிலோ நகைகள் மீட்கப்பட்ட நிலையில், மொத்தம் 11.7 கிலோ நகைகள் இதுவரை மீட்கப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

மதுரை தல்லாக்குளம் வைகை சாலையில் உள்ள தனியார் நகைக் கடையில் கடந்த நவ. 12-ஆம் தேதி 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து, மதுரை எஸ்எஸ் காலனி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து தனிப்படைகள் அமைத்து, நகை கொள்ளையில் ஈடுபட்டவரை தேடிவந்தனர்.

போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் நிஷாந்த் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் தொடர்புடையதாக இருவரை கைதுசெய்த தனிப்படை போலீஸார், முக்கிய நபரான நிஷாந்த்தை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் தேடப்பட்டுவந்த நிஷாந்த் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து சேலம் சென்ற தனியார் பேருந்தில் பயணித்துள்ளார்.

இதுகுறித்து தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்த பேருந்தை போலீஸார் பின்தொடா்ந்து கண்காணித்தனர். அந்தப் பேருந்து, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சேஷசம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை நிறுத்தப்பட்டிருந்தது. இதையறிந்து அங்கு சென்ற அதியமான்கோட்டை போலீஸார், பேருந்தில் இருந்த நிஷாந்த்தை கைது செய்தனர்.

மேலும் 6.2 கிலோ தங்கம் மீட்பு

இதையடுத்து, மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸார் சென்று நிஷாந்தை மதுரைக்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், மதுரை விளாச்சேரி கோபாலிபுரம் மலை அடிவாரம் பகுதியில் நகைகளைப் பதுக்கி வைத்திருப்பதாக நிஷாந்த் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை போலீஸாா் மீட்டனர்.

கோபாலிபுரம் மலை அடிவாரம் பகுதியிலிருந்து 6.2 கிலோ எடையிலான நகைகள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனா். ஏற்கெனவே, மீனாட்சி அடையாளம் காட்டியதன்பேரில் மாடக்குளம் பகுதியிலிருந்து 5.5 கிலோ நகைகள் மீட்கப்பட்ட நிலையில், மொத்தம் 11.7 கிலோ நகைகள் இதுவரை மீட்கப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

summary

An additional 6.2 kilograms of gold jewellery were recovered from a young man arrested in connection with the Madurai jewellery shop robbery.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.