மதுரை நகைக் கடை கொள்ளை விவகாரம்: இருவர் கைது; 5 கிலோ தங்கம் மீட்பு?
மதுரை நகைக் கடையில் ரூ. 20 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டது குறித்து...
மதுரை நகைக் கடையில் ரூ. 20 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் நேரு நகா், நேதாஜி பிரதான சாலையில் உள்ளது தனிஷ்க் நகைக் கடை. இந்தக் கடை அக். 14-ஆம் தேதி திறக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம்போல கடையைத் திறந்த ஊழியா்கள், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் பாதிக்கு மேல் கொள்ளை போனதையறிந்து, மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் கடைக்குள் ஆய்வு செய்தனா். அப்போது, ரூ. 20 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுதொடா்பாக, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்த போது, முகமூடி அணிந்த மா்ம நபா் ஒருவா் நகைக் கடையில் மின்தூக்கிக்காக அமைக்கப்பட்டிருந்த துவாரம் வழியாக உள்ளே நுழைந்து, கடையிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதுதொடா்பாக தனிப் படைகளை அமைக்கப்பட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்த கொள்ளைச் சம்பவத்தில் சந்தேகப்படும் நபராக நிஷாந்த்தை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக நிஷாந்தின் தந்தை சுரேஷ், இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 5 கிலோ நகைகள் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.