FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!

மதுரை நகைக் கடை திருட்டு வழக்கில், நிஷாந்த் கைதானது எப்படி என்பது பற்றி..

59 வினாடிகள் முன்பு
மதுரை நகைக் கடை திருட்டு - DNS
பகிர்:

மதுரையில் புதிதாகத் திறக்கப்பட்ட நகைக் கடையில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நிஷாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

நகைக் கடையில் 11 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவான இருந்த முக்கிய குற்றவாளி எனக் கருதப்படும் நிஷாந்த், தருமபுரி அருகே தேசம்பட்டியில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

இருசக்கர வாகனம், கார், பேருந்து என மாறி மாறி நிஷாந்த் பயணித்து தப்பி வந்த நிலையில், ஆம்னி பேருந்தில் சென்று கொண்டிருந்த நிஷாந்த்தைப் பார்த்த பேருந்து ஓட்டுநருக்கு சந்தேகம் வந்ததால், அவர் கொடுத்த தகவலின்படி நிஷாந்த் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நிஷாந்த்தை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் அவரை தனிப்படையினர் தேடி வந்தனர். அவரது செல்போன் எண்ணைத் தொடர்ந்து சென்று அவரது இருப்பிடத்தை அறிந்து தற்போது நிஷாந்த் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை நகைக் கடையில் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பெண் உள்பட இருவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுளள்னர்.

இந்த வழக்கில் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் 11 கிலோ தங்க நகைகளில் 5.5 கிலோ நகைகளை போலீஸாா் ஏற்கனவே மீட்டிருந்தனர்.

மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் உள்ளது தனிஷ்க் நகைக் கடை. இந்தக் கடையிலிருந்து ஏறத்தாழ 11 கிலோ தங்க நகைகள் கடந்த வியாழக்கிழமை அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன் உத்தரவின்பேரில், தெற்கு காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று தற்போது முக்கிய குற்றவாளியும் கைதாகியிருக்கிறார்.

முக்கிய குற்றவாளி யார்?

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த நிஷாந்த் கொள்ளையில் ஈடுபட்டதும், அவருக்கு உடந்தையாக அவரது தந்தை சுரேஷ், நிஷாந்தின் தோழி மீனாட்சி ஆகியோா் செயல்பட்டதும் தெரியவந்தது.

மீனாட்சியிடம் நடத்திய விசாரணையில், அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொள்ளையடிக்கப்பட்ட சுமாா் 5.5 கிலோ தங்க நகைகளை போலீஸாா் மீட்டனா். இருவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

summary

Jewelry store robbery in Madurai! How was Nishanth caught? A bus driver’s suspicion!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.