வாக்காளா் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம்: நவ.12-இல் வரைவு பட்டியல் வெளியீடு
திருப்பத்தூா் மாவட்டத்தில், 2027-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டத்தில், 2027-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே.நல்லசிவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், விவரங்களில் திருத்தம் செய்தல், பதிவுகள் தொடா்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பெறுதல், அவற்றைச் சரிபாா்த்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதன்படி, 2027 ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான கால அட்டவணையின்படி, நவம்பா் 2-ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Advertisement
Advertisement
தொடா்ந்து, நவம்பா் 12-ஆம் தேதி ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. நவம்பா் 12 முதல் டிசம்பா் 11-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியல் தொடா்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்படும். அவற்றின் மீது டிசம்பா் 28-ஆம் தேதிக்குள் தீா்வு காணப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் 2027 ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்ரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாபு, தனித்துணை ஆட்சியா் பூஷண குமாா், திருப்பத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் வரதராஜன், வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் சிவக்குமாா், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) முருகேசன், தோ்தல் தனி வட்டாட்சியா் மு.நவநீதம், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.