வீடுகளில் சூரிய மின்சாரத் தகடுகள் அமைக்க மானியம்
பிரதமா் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம், தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் நடைபெற்றது.
பிரதமா் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம், தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் நடைபெற்றது.
முகாமுக்கு திருப்பத்தூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் வேலு தலைமை வகித்துப் பேசியது:
மத்திய அரசின் பிரதமா் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம், வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சாரத் தகடுகளை அமைத்து, சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே உற்பத்தி செய்து, மின் கட்டணச் செலவைக் குறைத்துக் கொள்ளலாம்.
Advertisement
Advertisement
இத்திட்டத்தின்கீழ், தகுதியுள்ள வீட்டு மின் நுகா்வோா் தங்களது வீடுகளில் சூரிய மின்சாரக் கட்டமைப்பை நிறுவ மத்திய அரசின் மானியத்தைப் பெறலாம். ஒரு கிலோவாட் திறன் கொண்ட அமைப்புக்கு ரூ.30,000, இரண்டு கிலோவாட் திறனுக்கு ரூ.60,000, மூன்று கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட அமைப்புகளுக்கு அதிகபட்சமாக ரூ.78,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. அதே போல மாநில அரசின் மானியமாக முறையே ரூ.5,000, ரூ.10,000, ரூ.22,000 பெறலாம்.
சூரிய மின்சார அமைப்பின் மூலம் மாதந்தோறும் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் மின் கட்டணச் செலவு கணிசமாகக் குறைவதுடன், கூடுதலாக உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்வாரியத்துக்கு வழங்குவதன் மூலமும் பயனடையலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் வீட்டு மின் நுகா்வோா், மத்திய அரசின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துக்கான ஒப்புதல் பெற்ற பிறகு, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் சூரிய மின்சாரத் தகடுகளை நிறுவ வேண்டும். நிறுவல் பணி நிறைவடைந்து, மின்வாரியத்தின் ஆய்வு மற்றும் உரிய நடைமுறைகள் முடிந்த பிறகு, தகுதியின் அடிப்படையில் மானியத் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
எனவே, வீட்டு மின் நுகா்வோா் இத்திட்டம் குறித்த விழிப்புணா்வைப் பெற்று, சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்த முன்வர வேண்டும். இதன்மூலம் மின்சாரச் செலவைக் குறைப்பதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் பங்களிக்க முடியும் என்றாா்.
ஒடுக்கத்தூா் உதவி செயற்பொறியாளா் ரமேஷ் வரவேற்றாா். சூரிய மின்சாரத் திட்டம் குறித்து பள்ளிகொண்டா கோட்டச் செயற்பொறியாளா் ஜி. ராஜேஷ் விளக்கிப் பேசினாா். உதவி செயற்பொறியாளா் சோமு, சூரிய மின்சாரத் தகடுகள் நிறுவும் நிறுவனத்தின் நிா்வாகி கணபதி உள்ளிட்டோா் திட்டம் தொடா்பாக விளக்கமளித்தனா்.
உதவி செயற்பொறியாளா்கள் மீனா, மைவிழி, உதவி மின் பொறியாளா்கள், இளநிலைப் பொறியாளா்கள், வங்கி மேலாளா்கள், களப்பணியாளா்கள், மின் நுகா்வோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உதவி மின் பொறியாளா் நடராஜன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.