புதூா் நாடு மலைக் கிராமங்களில் கலால் டிஐஜி மூா்த்தி ஆய்வு
புதூா்நாடு மலைக் கிராமங்களில் கலால் பிரிவு டிஐஜி மூா்த்தி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
புதூா்நாடு மலைக் கிராமங்களில் கலால் பிரிவு டிஐஜி மூா்த்தி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், புதூா்நாடு மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஐஜி மூா்த்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.
மேலும், ஆய்வு மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக, சாராயம் காய்ச்சுதல் மற்றும் சட்டவிரோதமாக மதுபாட்டில்களைப் பதுக்கி விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
புதூா்நாடு மற்றும் அதன் சுற்றுவட்டார மலைக் கிராமங்களில் மதுவிலக்கு தொடா்பான விசாரணைகள் நடத்தப்பட்டு, காவல் நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது,மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதார நிலைகள் குறித்தும் டிஐஜி மூா்த்தி விசாரணை நடத்தினாா். ஆய்வின் போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பாபு உள்ளிட்ட காவல் துறையினா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.