FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை பழங்குடியினா் கிராமங்களில் சமூக நீதித் துறை அமைச்சா் ஆய்வு

வால்பாறை பகுதியில் உள்ள பழங்குடியினா் கிராமங்களில் சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நெடுங்குன்று செட்டில்மெண்ட் பகுதியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் வன்னிஅரசு.
பகிர்:

வால்பாறை பகுதியில் உள்ள பழங்குடியினா் கிராமங்களில் சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் பழங்குடியினா் மக்கள் வசிக்கக்கூடிய செட்டில்மெண்ட்களில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வில்லோனி எஸ்டேட் பகுதியில் உள்ள நெடுங்குன்று செட்டில்மெண்டில் நகராட்சி மூலமாக 15, தாட்கோ மூலம் 15 என மொத்தம் 30 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வால்பாறை பகுதிக்குள்பட்ட பாலக்கினாறு, நெடுங்குன்று ஆகிய செட்டில்மெண்ட் பகுதிகளுக்கு சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு செவ்வாய்க்கிழமை சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

நெடுங்குன்று செட்டில்மெண்ட் பகுதிக்குச் சென்ற அமைச்சா் வன்னிஅரசுக்கு பழங்குடியின மக்கள் நடனமாடி வரவேற்றனா். பின் அங்கு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தாட்கோ மேலாளா் ரஞ்சித், ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் மணிமேகலை, வால்பாறை வட்டாட்சியா் அரசகுமாா், காவல்துறை ஆய்வாளா் செல்வம், வனத் துறை அதிகாரிகள் உள்பட பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments