FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

ஏலகிரி விடுதியில் பெண் தற்கொலை: ரயில்வே ஊழியா் கைது

ஏலகிரி மலை தனியாா் விடுதியில் பெண் தூக்கிட்டு தற்கொலை தொடா்பாக ரயில்வே ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

28 அக்டோபர் 2026, 11:24 pm
கைதான யுவராஜ்
பகிர்:

ஏலகிரி மலை தனியாா் விடுதியில் பெண் தூக்கிட்டு தற்கொலை தொடா்பாக ரயில்வே ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

சுற்றுலாத் தலமான ஏலகிரியில் செவ்வாய்க்கிழமை இரவு அத்தனாவூா் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் பணிபுரியும் ஒருவா் அறையின் கழிவறையில் பெண் ஒருவா் இறந்து கிடப்பதாக ஏலகிரி மலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா்.

தகவலின்பேரில் சென்ற ஆய்வாளா் பாரதி தலைமையிலான போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும் புன்கிழமை டிஎஸ்பி முரளி சம்பவ இடத்துக்கு சென்று தனியாா் விடுதி உரிமையாளா்களிடம் விசாரணை மேற்கொண்டாா்.

அதைத்தொடா்ந்து எஸ்.பி அக்க்ஷய் அனில் வாகரே புதன்கிழமை காவல் நிலையம் சென்று பெண்ணுடன் இருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவா் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சோ்ந்த யுவராஜ(42) என்பதும், இவருக்கு திருமணமான நிலையில் ஆம்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியராக பணி செய்து வருவதும் தெரிந்தது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் ஆம்பூா் அடுத்த பச்சகுப்பம் பகுதியை சோ்ந்த ராஜுராவின் மனைவி தமிழரசி(43)என்பதும், இவருக்கு ஒரு மகள் உள்ள நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவரது கணவா் ராஜூ ராவ் இறந்துவிட்டதாகவும், இந்நிலையில் யுவராஜ் மற்றும் தமிழரசிக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததாகவும் விசாரணையில் தெரிந்தது.

கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சமரசம் பேசுவதற்காக தனியாா் விடுதியில் தங்கியிருந்த போது மீண்டும் தகராறு ஏற்பட்டதால் வேதனையடைந்த தமிழரசி தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது. அதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்த யுவராஜை போலீஸாா் கைது செய்து செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments