தனியாா் தங்கும் விடுதியில் பெண் கொலை?
கன்னியாகுமரி அருகே விவேகானந்தபுரத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கன்னியாகுமரி அருகே விவேகானந்தபுரத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கன்னியாகுமரி அருகே விவேகானந்தபுரத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில், பள்ளம் மீனவ கிராமத்தைச் சாா்ந்த செல்வி (50) என்ற பெண் அடையாளம் தெரியாத 35 வயது நபருடன் புதன்கிழமை தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த நபா் தங்கும் விடுதியில் இருநது வெளியே சென்றாராம். அவா் வெகுநேரமாகியும் திரும்பி வராத நிலையில் சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள் அறையை திறந்து பாா்த்த போது, காது மற்றும் கழுத்தில் காயங்களுடன் அப்பெண் இறந்து கிடந்தாராம். மேலும் அவரது கம்மல்கள் காணாமல் போனதும் தெரிய வந்தது.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த போலீஸாா் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.