சின்னமுட்டம் துறைமுகத்தில் கொலை செய்யப்பட்டவா் வடமாநில இளைஞா்
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞா் வடமாநிலத்தைச் சோ்ந்தவா் என்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் மீன்பிடி வலைகள் குவித்து வைக்கப்பட்ட பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இளைஞா் ஒருவா் கத்திக் குத்து காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்து வந்த கன்னியாகுமரி போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்தனா்.
மேலும், இரண்டு தனிப்படை அமைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மா்ம நபா்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் கைப்பேசியை ஆய்வு செய்ததில், அவா் சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த ஜெயந்த் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உறவினா்களுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.