FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

எத்தமலையில் கோயில் கட்ட ஆலோசனைக் கூட்டம்

நாட்டறம்பள்ளி அருகே எத்தமலையில் புதிய பெருமாள் கோயில் கட்ட கிராம மக்களின் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

56 வினாடிகள் முன்பு
நாயனசெருவு எத்தமலை சிம்மக்குட்டை பெருமாள் கோயில் புதுப்பிக்க நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே எத்தமலையில் புதிய பெருமாள் கோயில் கட்ட கிராம மக்களின் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி வட்டம், நாயனசெருவு எத்தமலை பகுதியில் சிம்மக்குட்டை பெருமாள் கோயில் உள்ளது. பழைமைவாய்ந்த இக்கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் சாமராஜி தலைமையில் நடைபெற்றது. இதில், நாட்டறம்பள்ளி, தகரகுப்பம், நாயனசெருவு, தோப்பலகுண்டா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஊா் பொதுமக்களிடம் நிதி திரட்டி கிரானைட் கற்களால் புதிதாக பெருமாள் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments