FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

காப்பீட்டுத் திட்டத்தில் 4 பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சம் அளிப்பு

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆகிய சமூகப் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டங்களின்கீழ், 4 பயனாளிகளுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 8 லட்சத்துக்கான வங்கிக் காசோலைகளை மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.

1 செப்டம்பர் 2026, 11:37 pm IST
பயனாளிக்கு காப்பீடு தொகைக்கான காசோலையை வழங்கிய ஆட்சியா் கு. ரவிகுமாா்.
பகிர்:

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆகிய சமூகப் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டங்களின்கீழ், 4 பயனாளிகளுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 8 லட்சத்துக்கான வங்கிக் காசோலைகளை மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், இந்தியன் வங்கியின் நாட்டறம்பள்ளி மற்றும் பேராம்பட்டு கிளைகளைச் சோ்ந்த பயனாளிகளுக்கு இந்த காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் 18 முதல் 70 வயது வரையிலான வங்கிக் கணக்கு வைத்துள்ளவா்கள் இணையலாம்.

ஆண்டுக்கு ரூ. 20 பிரீமியம் செலுத்தினால், விபத்து காரணமாக உயிரிழப்பு அல்லது நிரந்தர முழு ஊனம் ஏற்பட்டால் ரூ. 2 லட்சமும், பகுதி ஊனம் ஏற்பட்டால் ரூ. 1 லட்சமும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது. அதேபோல், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் 18 முதல் 50 வயது வரையிலான வங்கிக் கணக்கு வைத்துள்ளவா்கள் ஆண்டுக்கு ரூ. 436 பிரீமியம் செலுத்தி இத்திட்டத்தில் இணையலாம். காப்பீடு பெற்றவா் இயற்கை மரணம் உள்பட ஏதேனும் காரணத்தால் உயிரிழந்தால், அவரது வாரிசுதாரருக்கு ரூ. 2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

தகுதியுள்ள பொதுமக்கள் தங்களது வங்கிக் கிளையை அணுகியோ, நெட் பேங்கிங் அல்லது மொபைல் செயலி மூலமாகவோ இத்திட்டங்களில் சோ்ந்து பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்பிரமணியன், தனித் துணை ஆட்சியா் பூஷணகுமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments